டெம்பா பா: கால் எலும்பு முறிவு என்னை ஓய்வு பெறச் செய்யாது

ஷாங்ஹாய்: கால் எலும்பு முறிவு தம்மை காற்பந்து ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறச் செய்யாது என்று முன்னாள் நியூகாசல், செல்சி வீரர் டெம்பா பா தெரிவித்துள்ளார். சீன சூப்பர் லீக்கில் ஷாங்ஹாய் ஷென்ஹுவா குழுவுக்காக விளையாடி வந்த பா, ஆட்டத்தின்போது படுகாயம் அடைந்தார். கால் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் வலியால் கதறி அழுத காட்சி பார்ப்பவரைப் பதறவைத்தது. பாவுக்கு ஏற்பட்ட இந்த மிக மோசமான எலும்பு முறிவு அவரது காற்பந்து வாழ்க்கையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என்று ஷாங்ஹாய் ஷென்ஹுவா குழுவின் பயிற்றுவிப்பாளர் கிரேகோரியோ மன்சானோ அச்சம் தெரிவித்தார்.

ஆனால் படுகாயம் அடைந்துள்ளபோதிலும் மனந்தளராமல் இருக்கிறார் செனகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரரான 31 வயது பா. "எனக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நான் இதிலிருந்து மீண்டு வருவேன். காற்பந்திலிருந்து ஓய்வு பெறமாட்டேன்," என்று அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!