போக்பா நிலை இழுபறி

மான்செஸ்டர்: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியில் பிரான்சுக்காகக் களமிறங்கி தமது அபாரத் திறனால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பால் போக்பாவை (படம்) இத்தாலிய லீக்கில் போட்டியிடும் யுவெண்டசிடமிருந்து வாங்க மான்செஸ்டர் யுனைடெட் எடுத்த முதல்கட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. போக்பாவை 100 மில்லியன் பவுண்டுக்கு வாங்க யுனைடெட் முன்வந்தும் அதை யுவெண்டஸ் ஏற்க மறுத்தது. போக்பாவைப் பெறவேண்டுமாயின் யுனைடெட் தர தயாராக இருக்கும் 100 மில்லியன் பவுண்டுடன் சேர்த்து கூடுதலாக 8 மில்லியன் பவுண்டை அது கேட்பதாகத் தெரிவிக்கப்பட்டது

யுவெண்டசின் இந்த நிபந்தனை நனவானால் உலகின் ஆக அதிக வருமானம் ஈட்டும் காற்பந்து வீரர் என்ற பெருமை போக்பாவைச் சேரும். இந்நிலையில், போக்பாவை வாங்க விருப்பம் தெரிவித்திருந்த ஸ்பானிய லீக் ஜாம்பவான் ரியால் மட்ரிட் அந்த எண்ணத்தைக் கைவிட்டுள்ளது. போக்பாவை வாங்குவதில் தனக்கு இருந்த ஒரே ஒரு போட்டியும் விலகியுள்ள நிலையில் நிம்மதிப் பெருமூச்சு விடும் யுனைடெட், யுவெண்டசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் எந்நேரமும் யுவெண்டசுடன் யுனைடெட் உடன்பாடு கொண்டு போக்பாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கிடையே, யுனைடெட்டைப் பலப்படுத்த போக்பாவை வாங்கவேண்டும் என்பதில் யுனைடெட்டின் புதிய நிர்வாகியான ஜோசே மொரின்யோவும் முனைப்புடன் இருக்கிறார். யுனைடெட்டுக்கு வலுசேர்க்கும் நோக்குடன் போக்பாவை எப்படியாவது பெற முயற்சி செய்து வரும் மொரின்யோ, தமது அணியில் ஏற்கெனவே இருக்கும் நட்சத்திர வீரர்களைத் தக்கவைத்து அனுபவமில்லாத இளம் ஆட்டக்காரர்கள் சிலரை விற்க முடிவு செய்துள்ளதாக தி இன்டிபெண்டன்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது. அடுத்த பருவத்துக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் வகையில் பயிற்சி ஆட்டங்களில் களமிறங்க யுனைடெட் குழு நேற்று சீனா சென்றடைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!