புதிய இங்கிலாந்து நிர்வாகியாக அலர்டைஸ்

லண்டன்: இங்கிலாந்துக் காற் பந்துக் குழுவின் அடுத்த நிர்வாகியாக சேம் அலர்டைஸ், 61, நியமிக்கப்படவுள்ளார். இங்கிலாந்துக் காற்பந்துச் சங்கத்தின் (எஃப்ஏ) தலைவர் கிரெக் டைக் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார். ஹல் சிட்டி குழுவின் நிர்வாகி ஸ்டீவ் புரூஸ், போர்ன்மத் குழுவின் நிர்வாகி எடி ஹோவ், அமெரிக்க காற்பந்துக் குழுவின் நிர்வாகியாக இருக்கும் ஜெர்மனியின் யர்கன் கிளின்ஸ்மேன் ஆகியோரையெல் லாம் பின்னுக்குத் தள்ளி மூவர் அடங்கிய தேர்வுக் குழுவின் ஏகோபித்த ஆதரவை அலர்டைஸ் பெற்றதாகக் கூறப்பட்டது. ஆர்சனல் நிர்வாகி ஆர்சன் வெங்கர்தான் எஃப்ஏவின் முதல் தெரிவாகக் கூறப்பட்டது. ஆனால், வெங்கர் அதை நிராகரித்துவிட்டதால் அந்த வாய்ப்பு சண்டர்லேண்ட் குழு நிர்வாகி அலர்டைசைத் தேடிச் சென்றது. போதாதற்கு, முன்னாள் மான் செஸ்டர் யுனைடெட் நிர்வாகி சர் அலெக்ஸ் ஃபெர்குசனின் வலு வான ஆதரவும் அவருக்குக் கிட்டியது.

அண்மையில் நடந்து முடிந்த யூரோ காற்பந்துத் தொடரில் காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட் டத்தில் தன்னைவிட 164 மடங்கு குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட ஐஸ்லாந்திடம் தோற்று அவமானப்பட்டது ரூனி தலைமை யிலான இங்கிலாந்துக் குழு. இந்தத் தோல்விக்குப் பொறுப் பேற்று நிர்வாகிப் பதவியிலிருந்து விலகினார் ரோய் ஹாட்சன். இந்நிலையில், ஹாட்சனுக்குப் பின் அலர்டைஸ்தான் இங்கிலாந்து குழு நிர்வாகியாகப் பதவியேற்க உள்ளாரா என்று கேட்டதற்கு, "அவர்தான் சரியான ஆள் என்று மூன்று உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. அந்த முடிவை நாங்களும் ஏற்கி றோம்," என்றார் திரு டைக்.

மான்செஸ்டர் யுனைடெட் குழு நிர்வாகியான ஜோசே மொரின்யோ வும் இதையே கூறுகிறார். "இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் அனுபவமிக்கவரான அலர்டைசுக்கு இதுவரை தேசிய குழு நிர்வாகியாகும் வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால், இப்போது அவர் அதை ஏற்கத் தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன். அவர்தான் சரியான தேர்வு. வீரர் களை ஊக்கப்படுத்துவதிலும் அவர்களிடையே நல்ல குழு உணர்வை உண்டாக்குவதிலும் அவர் திறமையானவர். மேன்யூ விலும் பல இங்கிலாந்து வீரர்கள் இருப்பதால் நல்ல இங்கிலாந்துக் குழுவை உருவாக்க என்னாலான உதவியை அவருக்குச் செய்ய நான் முயல்வேன்," என்றார் மொரின்யோ.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!