வருகிறார் போக்பா

மான்செஸ்டர்: பிரெஞ்சு மத்தியத் திடல் காற்பந்து வீரர் பால் போக்பாவை (படம்) ஒப்பந்தம் செய்ய இதற்குமுன் இல்லாத அள வாக 110 மில்லியன் யூரோ (S$165 மி.) கொடுக்க மான்செஸ்டர் யுனை டெட் காற்பந்துக் குழு முன்வந்து இருப்பதாக 'கோல்' இணையத் தளம் தெரிவித்துள்ளது. இது உண்மையெனில், ஆக அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட காற்பந்து ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெறுவார் போக்பா. டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவில் இருந்து வேல்ஸ் நாட்டு வீரர் கேரத் பேலை 2013ல் ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழு 100 மி. யூரோ கொடுத்து ஒப்பந்தம் செய்ததுதான் முந்தைய சாதனை.

2011-=12 காற்பந்துப் பருவத்தில் மேன்யூவிற் காக மூன்று போட்டிகளில் விளையாடிய போக்பா பின் 2012ல் இத்தாலியின் யுவென்டஸ் குழுவிற்கு இடம் மாறினார். யுவென்டஸ் குழு விற்காக 124 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 28 கோல்களையும் அடித்துள்ளார். போக்பாவை மீண்டும் மேன்யூவிற்கே கொண்டு வருவது தொடர்பில் இரு குழுக்களின் நிர்வாகிகளும் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. மேன்யூவுடன் போக்பா ஐந்தாண்டு ஒப்பந் தத்தில் கையெழுத்திடலாம் என்றும் அதற்காக அவருக்கு ஆண்டிற்கு 13 மி. யூரோ (S$19.4 மி.) ஊதியம் தர மேன்யூ ஒப்புக்கொண்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

எரிக் பெய்லி, ஹென்ரிக் மகிதார்யான், ஸ்லாட்டன் இப்ராகிமோவிச் என ஏற்கெனவே மூன்று வீரர்களை இந்தப் பருவத்தில் ஒப்பந்தம் செய்துள்ள மேன்யூ, இன்னும் பல திறனாளர் களை தன்வசம் இழுக்கும் முனைப்புடன் இருக்கிறது. போக்பா ஒப்பந்தச் செய்தி குறித்துக் கேட்ட போது, "இதை நான் உறுதி செய்யவும் முடியாது, மறுக்கவும் முடியாது," என்றார் மேன்யூ நிர்வாகி ஜோசே மொரின்யோ. இப்படி நழுவும்விதமாக அவர் பதிலளித்தாலும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் போக்பா ஒப்பந்த அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!