ஆஸி. கிரிக்கெட் பயிலக ஆலோசகராக டோனி

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் முன்னணி, அதிநவீன வசதி களைக் கொண்ட தனியார் கிரிக் கெட், கல்வியியல் விளையாட்டுப் பயிலகமான கிரெய்க் மெக்டர்மட் அனைத்துலக கிரிக்கெட் பயிலகத் தின் ஆலோசகராக இந்திய கிரிக் கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட்டுக்கு முக்கியத் துவம் அளிக்கும் 'விளையாட்டு அறிவியலும் நிர்வாகமும்' எனும் நான்காண்டு இளங்கலைப் பட்டப் படிப்பை அந்தப் பயிலகம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தப் பயிலகம் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் மெக்டர்மட்டுக்குச் சொந்தமானது.

இந்த முயற்சியில் தாமும் இணையவிருப்பது குறித்து அதிக மகிழ்ச்சி அடைவதாக டோனி தெரிவித்தார்.

"கிரிக்கெட்டால்தான் எனக்கு இந்தப் பேரும் புகழும் வாழ்க்கையும் கிடைத்தது. அதனால் கிரிக்கெட் டிற்கு ஏதாவது திருப்பிச் செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். அதற்கு மிகச் சரியான தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது மெக்டர்மட் அனைத்துலக கிரிக் கெட் பயிலகம்," என்றார் டோனி "மிக முக்கியமாக, விளையாட் டில் அதிக ஆர்வமுடைய குழந் தைகள் விளையாட்டிலும் கல்வி யிலும் ஒரு சமநிலையைப் பேண இந்தப் பயிலகம் துணை செய்யும். இதுவரை, இரு துறைகளிலும் வல்லவர்களாக விளங்கிய இளையர்கள் ஏதேனும் ஒரு துறையை மட்டும் தேர்வு செய்ய வேண்டி இருந்தது," என்றும் அவர் சொன்னார். இந்தியா, ஆஸ்திரேலியா நாடு களைச் சேர்ந்த வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களுக்கு வழிகாட்டி யாகச் செயல்பட தமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!