மேன்யூ புதிய நிர்வாகி மொரின்யோவின் முதல் தோல்வி

ஷங்காய்: மான்செஸ்டர் யுனை டெட் குழுவின் புதிய நிர்வாகியான மொரின்யோ முதல் தோல்வியைச் சந்தித்துள்ளார். பொருஸியா டோர்ட்மண்ட் குழுவுக்கு எதிராக அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டி யில் மொரின்யோவின் தலைமை யில் தனது இரண்டாவது போட்டி யில் விளையாடியது மேன்யூ. சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் 4=1 என மேன்யூ தோல்வியடைந்தது. ஆட்டம் தொடங்கிய 19வது முதல் கோலை அடித்து டோர்ட் மண்ட் முன்னிலை பெற்றது.

தனது குழுவின் கோல் எண்ணிக்கையைத் தொடங்கி வைத்தார் கேஸ்ட்ரோ. ஒபமியாங் தனக்குக் கிடைத்த 'ஃப்ரீ கிக்' வாய்ப்பைப் பயன் படுத்தி அடித்தப் பந்தை, மேன்யூ வின் அனுபவமற்ற கோல்காப்பாளர் சேம் ஜான்ஸ்டோன் கோலாக விடாமல் தடுத்துவிட்டார். ஆனால், தனக்குக் கிடைத்த அடுத்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஒபமியாங். 35வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின்போது கேஸ்ட்ரோ கடத்திய பந்தை ஒபமியாங் கோலாக மாற்றினார்.

டோர்ட்மண்ட்டின் இந்த இரண் டாவது கோல் மேன்யூவிற்கு சற்று கலக்கத்தைக் கொடுத்தது. 57வது நிமிடத்தில் டெம்பெலே கோலடித்து தனது குழுவின் வெற்றியை உறுதி செய்தார். அதன் பின்னர், 59வது நிமிடத்தில்தான் மேன்யூ தனது ஒரே கோலை அடித்தது. அதுவும் டோர்ட்மண்ட் குழு வில் இருந்து மேன்யூவிற்கு வந்த மகிதார்யான் அந்தக் கோலைப் போட்டார். டோர்ட்ம்ண்ட்டின் கேஸ்ட்ரோ 86வது நிமிடத்தில் மீண்டும் கோலடிக்க 4-1 என மேன்யூ தோல்வியடைந்தது.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கான ஒரே கோலைப் போட்டார் முன்னாள் டோர்ட்மண்ட் வீரர் மகிதார்யான். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!