பந்துவீச்சில் ஷமி புது யுக்தி

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்தடிப்பின்போது ஓட்டங்களைக் குவித்த இந்திய அணி, பந்துவீச்சின் போதும் மளமளவென்று விக்கெட்டு களைக் கைப்பற்றினர். நேற்று முன்தினம் நடந்த 3வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 243 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ-ஆன் ஆனது. மிஸ்ரா இரண்டு விக்கெட்டு களைக் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 41 ஓட்டங்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும் ஷமி 66 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் 13 டெஸ்ட் போட்டி களில் 50 விக்கெட்டுகளைக் கைப் பற்றிய ஷமி, ஏற்கெனவே இரண் டாவது இடத்தில் உள்ள வெங்கடேஷ் பிரசாத்தின் சாதனையைச் சமன் செய்துள்ளார். ஆன்டிகுவாவின் மந்தமான, பந்துகள் எழும்பாத ஆடுகளத்தில் முகமது ஷமி நேற்று முன்தினம் சில பந்துகளைப் பந்தடிப்பாளர்கள் எதிர் பாராத அளவுக்கு அதிக உயரம் எழும்பச் செய்தார். 2015 உலகக் கிண்ணத்தின் போது, தனது பந்துவீச்சு ஓட்டத்தைக் குறைந்த தூரமாக (ஷார்ட் ஸ்டெப் களாக) மாற்றப்போவதாக அவர் தெரிவித்ததோடு அது தனக்கு ஷோயிப் அக்தர் கொடுத்த அறிவுரை என்றும் தெரிவித்தார் ஷமி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!