அஸ்வின் அபாரம்; இந்தியா வெற்றி

ஆன்டிகுவா: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி யில் இந்தியா 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாகை சூடி உள்ளது. இந்தியாவின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஏழு விக்கெட்டுகளைச் சாய்த்து தமது அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பூவா தலை யாவில் வென்ற இந்தியா முதலில் பந்தடித்தது. இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 566 ஓட்டங்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.

பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 243 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 'ஃபாலோ ஆன்' ஆனது. பிராத்வைட் (74), டவுரிச் (57), ஹோல்டர் (36) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முகம்மது சமி, உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டு களைச் சாய்த்தனர். மிஸ்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து மீண்டும் பந்தடிக்கும்படி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸைக் கேட்டுக் கொண்டது. 323 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடங்கியது. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 13 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராத்வைட் 2 ஓட்டங்களில் தமது விக்கெட்டை இழந்தார். சந்திரிக்கா (9), டேரன் பிராவோ (10) ஓட்டங்களில் களத்தில் இருந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!