காற்பந்து: வெற்றியாளர்ஸ் கிண்ணப் போட்டியில் செல்சியின் ஃபேப்ரகாஸ் வெளியேற்றம்

வெற்றியாளர்ஸ் கிண்ணத்துக்காக நேற்று முன்தினம் இங்கிலாந்தின் செல்சி, லிவர்பூல் அணிகள் மோதிய காற்பந்து ஆட்டம் சரளமான விளையாட்டுக்குப் பதில் தேவையற்ற தப்பாட்டத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பாசடேனா ரோஸ் பவுல் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியின் புதுவரவான இளம் வீரர் ராக்னர் கிளாவான் என்பவருக்கு எதிராக ஃபேப்ரகாஸ் (படம்) அபாயகரமான முறையில் தடுப்பாட்டத்தை மேற்கொண்டதாக வும் அதனால் நடுவர் அவரை ஆட்ட மைதானத்திலிருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் போட்டியில் செல்சி அணி வெற்றி பெற்றபோதிலும் ஃபேப்ரகாசின் இச்செயல் செல்சிக்கு ஒரு கரும்புள்ளி என்று வர்ணிக்கப்படுகிறது.
அத்துடன், இந்தப் போட்டியில் நடுவர் லிவர்பூலைச் சேர்ந்த நான்கு ஆட்டக்காரர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பித்த தாகவும் கூடவே செல்சியின் கேரி கேஹில் என்பவருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதாகவும் செய்தித் தகவல்கள் தெரிவிக் கின்றன.
எனினும், இதே கேரி கேஹில்தான் லிவர்பூலின் தற்காப்பு அரண் வீரர்களைவிட உயரமாக நாடாளுமன்ற உறுப்பினர் சக விளை யாட்டாளர் ஃபேப்ரகாஸ் கொடுத்த பந்தைத் தலையால் முட்டி கோல் வலைக்குள் புகுத்தினார்.
இதன்மூலம், ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்ட பெருமையுடன் செல்சிக்கு வெற்றியைத் தேடித் தந்ததன் புகழையும் பெற்றார் கேரி கேஹில்.
இந்தக் காற்பந்தாட்டத்தில் லிவர்பூல் அணி முனைப்புடன் விளையாடியபோதிலும் அந்த அணியினால் கோல் போட முடிய வில்லை என்று காற்பந்து விமர் சகர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!