106 ஓட்ட வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

கண்டி: 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இலங்கை தோற்கடித்துள்ளது. இதுவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றி ஆகும். இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு 268 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நான்காவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 26 ஓட்டங்களுடனும் வோக்ஸ் 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந் தனர்.

ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. காலையில் மழை பெய்ததால் ஆட்டம் காலதாமதமாகத் தொடங் கியது. ஆட்டம் தொடங்கியதும் வோக்ஸ் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஷேன் மார்ஷ் 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் அணித் தலைவர் ஸ்மித் 55 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ஸ்டார்க் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் லயன் 8 ஓட்டங் களிலும் நடையைக் கட்டினர். அப்போது ஆஸ்திரேலியா அணி 56.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!