‘மாரெசின் கவனம் சிதறிவிட்டது’

லண்டன்: லெஸ்டர் சிட்டியின் நட்சத்திர வீரர் ரியாட் மாரெசை

வாங்க மற்ற குழுக்கள் முன் வந்துள்ளதாகப் பரவி வரும்

வதந்திகளால் அவரது கவனம் சிதறியுள்ளதாக அக்குழுவின்

நிர்வாகி கிளோடியோ ரெனியேரி தெரிவித்துள்ளார்.

அல்ஜீரியாவைச் சேர்ந்த மாரெஸ், கடந்த பருவத்தில்

லெஸ்டருக்காக 17 கோல்களைப் போட்டு இங்கிலிஷ் பிரிமியர் லீக்

பட்டத்தை அக்குழு வெல்ல வித்திட்டார்.

ஆனால் கடந்த சனிக்கிழமை பிரான்சின் பாரிஸ் செயிண்ட

ஜெர்மேனுக்கு எதிரான ஆட்டத்தில் மாரெஸ் சோபிக்கவில்லை.

அந்த ஆட்டத்தில் 4-0 எனும் கோல் கணக்கில் லெஸ்டர்

படுதோல்வி அடைந்தது. மாரெசை வாங்க ஆர்சனல் விரும்புகிறது

என்ற செய்தி அவரது கவனத்தைச் சிதற வைத்திருக்கலாம் என்று

ரெனியேரி நம்புகிறார்.

"பரவி வரும் வதந்திகளால் மாரெசின் கவனம் சிதறியிருக்

கலாம்.

"ஆனால் இம்மாதிரியான அனுபவங்களும் எனது ஆட்டக்

காரர்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும். எங்களுடன் மாரெஸ்

தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதை அவர் புரிந்துகொள்ள

வேண்டும். அவரது உடற்திறனை மேம்படுத்தி கடந்த பருவத்தில்

சிறப்பாக விளையாடியதுபோல இந்தப் பருவத்திலும் லெஸ்டருக்

காக அவர் விளையாடவேண்டும்,"என்றார் ரெனியேரி.

இந்நிலையில், மாரெசை வாங்க ஆர்சனல் கொண்டிருக்கும் விருப்

பத்தை அதன் நிர்வாகி ஆர்சன் வெங்கர் உறுதிச் செய்ய மறுத்து

விட்டார். வீரர்களை வாங்குவது தொடர்பான தகவல்களை

ஆர்சனல் ரகசியமாக வைத்துக் கொள்ளும் என்றார் அவர்.

லெஸ்டரின் ஜேமி வார்டியை வாங்க ஆர்சனல் எடுத்த முயற்சி

தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்சனலுடன்

இணைய வார்டி மறுத்தது அக்குழுவுக்கு ஏமாற்றமே.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!