நோய்வாய்ப்பட்டுள்ள ஆஸி. நீர்ப்பந்து வீராங்கனைகள்

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட இருக்கும் ஆஸ்திரேலிய நீர்ப்பந்து வீராங் கனைகளில் நால்வர் இரைப்பை நோய் காரணமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். ரியோ டி ஜெனிரோவுக்கு வருவதற்கு முன்பு இத்தாலிய தலைநகர் ரோமில் இருந்தபோது இந்த வீராங்கனைகளுக்கு இந்நோய் தொற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. "பாதிக்கப்பட்ட வீராங்கனை களை ஆஸ்திரேலியாவின் மற்ற வீரர்களிடமிருந்து தனிமைப் படுத்த நாங்கள் முடிவெடுத் துள்ளோம்," என்று அக்குழுவின் தலைவர் திருவாட்டி கிட்டி சில்லர் தெரிவித்தார். நோய்வாய்ப் பட்டுள்ள வீராங்கனைகளின் உடல்நிலையை ஆஸ்திரேலிய அணியின் மருத்துவத் தலைவர் கண்காணித்து வருகிறார்.

ஒலிம்பிக் போட்டிக்காக ரியோ டி ஜெனிரோ வந்ததிலிருந்து ஆஸ்திரேலிய அணி பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. ஒலிம்பிக் கிராமம் தங்குவதற்கு ஏற்புடையதாக இல்லை என்று குறைகூறிய ஆஸ்திரேலிய அணி அங்கு தங்க மறுப்பு தெரிவித்திருந்தது. அந்த அணி மேற்கோள் காட்டிய குறைகள் சரிசெய்யப் பட்டதும் ஆஸ்திரேலிய வீரர் களும் அதிகாரிகளும் அங்கு தங்க தொடங்கினர். இந்நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் ஆஸ்திரேலியக் குழு வினர் தங்கியிருந்த கட்டடப் பிரிவில் தீ முண்டது. இதில் யாரும் காயமடையவில்லை என்ற போதிலும் அக்குழுவுக்கு ஏற்பட்ட சோதனைகள் அத்துடன் முடிய வில்லை. அக்குழுவுக்குச் சொந்த மான மடிக்கணியும் சீருடைகளும் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து திருடப்பட்டன. இருப்பினும், தங்களுக்கு ஏற்பட்ட சவால்களைப் பற்றிக் கவலைப்படாமல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட ஆஸ்திரேலிய வீரர்கள் ஆயத்த மாக இருப்பதாகத் திருவாட்டி சில்லர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!