ஒலிம்பிக் சுடரை ஏற்றிவைக்க பெலேவுக்கு அழைப்பு

பிரேசிலியா: ரியோ டி ஜெனி ரோவில் நாளை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஒலிம்பிக் சுடரை ஏற்றிவைக்க பிரேசிலிய காற்பந்து சகாப்தம் பெலேவுக்கு (படம்) அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஒலிம்பிக் சுடரை ஏற்றிவைக்க தமக்கு வந்த அழைப்பு மகிழ்ச்சி யைத் தருவதாக பெலே தெரி வித்தார். இருப்பினும், தாம் ஏற்கெனவே கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தம் அதை அனுமதிக்குமா என்பதை அவர் சரிபார்த்து வருகிறார். இது குறித்து தம்மை ஒப்பந்தம் செய்த அமெரிக்க நிறுவனத்துடன் அவர் பேசி வருகிறார். ஒப்பந்தப்படி வர்த்தக ரீதியில் பெலேயின் பெயரைப் பயன்படுத்த அந்த நிறுவனத்துக்கு உரிமம் உண்டு.

"பிரேசில் நாட்டைச் சேர்ந்தவன் என்ற அடிப்படையில் சொந்த மண்ணில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் சுடரை ஏற்றி வைக்க நான் விரும்புகிறேன். ஆனால் நான் ஓர் ஒப்பந் தத்தில் கையெ ழுத்திட்டுள் ளேன். அதற்கு நான் கட்டுப்பட் டாக வேண் டும்," என்றார் பெலே. அனைத் துலக ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் தாமஸ் பாச், பிரேசிலின் ஒலிம்பிக் மன்றத் தலைவர் கார்லோஸ் ஆர்தர் நுஸ்மனும் ஒலிம்பிக் சுடரைத் தாம் ஏற்றி வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த தாக பெலே செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைக்கும் கௌரவத்தை ஏற்பது குறித்து பெலே இன்று தமது முடிவைத் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசிலுக்கு மூன்று முறை உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் கிண்ணம் ஏந்திய பெலே ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைக்கப்பட உள்ள விளையாட்டரங் கத்தில் 1969ஆம் ஆண்டு தமது 1,000வது கோலைப் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசி லுக்குப் பெருமை சேர்த்த பெலே தான் ஒலிம்பிக் சுடரை ஏற்றிவைப் பதற்கு தகுதியானவர் என்று ரசிகர்கள் பலர் கூறி வருகின் றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!