ஒலிம்பிக் கிராமத்தில் ரஷ்ய கொடி ஏற்றம்

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றியபோது அனைத்து ரஷ்ய வீரர்களும் ஒன்றிணைந்தனர். ஒலிம்பிக் போட்டியிலிருந்து தங்கள் நாட்டின் 100க்கணக்கான வீரர்கள் தடை செய்யப்பட்டதற்கு எதிர்க்குரல் கொடுக்கும் விதமாக நேற்று ரஷ்ய வீரர்கள் ஒன்று திரண்டனர். ஊக்க மருந்து உட்கொண்டதற் காக ரஷ்ய திடல்தட வீரர்கள் அனைவரும் உட்பட மேலும் பல ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற் பதற்கு அண்மையில் தடை விதிக்கப் பட்டது.

ஆனால் இருமுறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் வீராங்கனை ஸ்வெட்லானா குஸெநெட்ஸே„வா உட்பட ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் பல ரஷ்ய வீரர்களுக்கு இந்த போட்டி மீது தாங்கள் கொண்டுள்ள கடப்பாட்டை ஒலிம்பிக் கிராமத் துக்கும் உலக மக்களுக்கும் காட்டுவது மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மற்ற பெரிய நாடுகளெல்லாம் சிறிய குழுவை அனுப்பி வைத்திருக்கும் வேளையில் ரஷ்யா எஞ்சியிருக்கும் தனது அனைத்து வீரர்களையும் இந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுப்பி வைந்திருந்தது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள வீரர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் ஏற்றப்பட்ட ரஷ்ய கொடி. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!