பிரெஞ்சு வீரருக்கு கால் எலும்பு முறிவு

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் விளையாட்டுகளில் உடலுறுதிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்று நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரெஞ்சு வீரர் சமிர் அய்ட் சையட் என்பவர் கம்பியில் தனது சாகசங்களை நிகழ்த்தினார். பின்னர் கீழே குதிக்கும்போது அவரது இடது கால் மடிந்த நிலையில் கீழே விழுந்தார்.

இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய விளை யாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவரைப் பற்றிக் கூறும் பிரெஞ்சு குழுவின் தலைவரான கோரின் மஸ்டார்ட் கேலன், "அவர் மிகவும் நட்பாகப் பழகு பவர். பதக்கம் வெல்லும் எண் ணத்தில் முழு முயற்சியில் ஈடு பட்டார்," என்று கூறினார்.

ஒலிம்பிக்கில் 'ஜிம்னாஸ்டிக்ஸ்' எனப்படும் உடலுறுதிப் போட்டிகளில் பங்கேற்ற பிரான்சின் சமிர் அய்ட் சையட் கீழே குதிக்கும்போது கால் தவறி விழுந்ததன் விளைவாக அவரது இடது கால் எலும்பு முறிந்து வேதனையில் துடிக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!