ஒரே போட்டியில் இருவருக்குத் தங்கம்

பெண்களுக்கான 100 மீ. எதேச் சைபாணி நீச்சலில் இரு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஆயினும், வெற்றி பெறுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் கேம்ப்பெல் சகோதரிகளை அவை சென்றடைய வில்லை. கனடாவின் 16 வயது பென்னி ஒலெக்சியக், அமெரிக்காவின் 20 வயது சிமோன் மேனுவல் ஆகிய இருவரும் 52.70 வினாடிகளில் பந்தய தூரத்தை நீந்தி தங்கம் வென்றதுடன் புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்தனர்.

சுவீடனின் சாரா சோஸ்ட்ரோம் வெண்கலத்தைக் கைப்பற்றினார். நடப்பு உலக வெற்றியாளரான புரோன்ட் கேம்ப்பெல், 22, நான்கா வதாக வந்தார். அவருடைய சகோதரி கேக் கேம்ப்பெல், 24, ஆறாமிடத்தைப் பிடித்தார். ஒரே போட்டியில் தங்க, வெள்ளிப் பதக்கங்களை வெல் லும் முதல் சகோதரிகள் தாங்கள் தான் எனும் சாதனையைப் படைக் கும் முனைப்பில் இருந்தனர் கேம்ப்பெல் சகோதரிகள். ஆனால், நடந்தது வேறு. ஒலெக்சியக்கும் மேனுவலும் புதிய வரலாறு படைத்தனர். ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே விளையாட்டில் இருவருக்குத் தங்கம் கிடைத்து இருப்பது இது இரண்டாம் முறை.

பெண்களுக்கான 100 மீ. எதேச்சைபாணி நீச்சலில் பந்தய தூரத்தை ஒரே நேரத்தில் கடந்து தங்கம் வென்ற அமெரிக்காவின் சிமோன் மேனுவல், 20 (இடது), கனடாவின் பென்னி ஒலெக்சியக், 16. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!