உலக ஊடகங்களின் பார்வையில்...

ரியோவில் 100 மீ. வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலுக்கு முன்பு பெரும்பாலான உலக ஊடகங்கள் மைக்கல் ஃபெல்ப்சின் பெயரையே உச்சரித்துக்கொண்டு இருந்தன. அப்போட்டி ஃபெல்ப்சின் கடைசிப் போட்டி என்பதால் அதில் அவர் நிச்சயம் வெற்றிபெறுவார் என்றே அந்த ஊடகங்கள் கருதின. ஆனால் ஒலிம்பிக் நாயகனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஸ்கூலிங் வெற்றி பெற்றதைக் கண்டு மலைத்துப்போன ஊட கங்கள் ஸ்கூலிங்கைப் பற்றிய தகவல்களைத் திரட்ட போட்டி போட்டன. உலகம் முழுவதும் பலர் கேட்கும் கேள்வியைத் தனது தலைப்புக் கேள்வியாகக் கேட்டது பீப்பள்ஸ் சஞ்சிகை: "யார் இந்த ஜோசஃப் ஸ்கூலிங்?".

"சிறிய நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்ற மலைப்பும் அதே நேரத்தில் தன்னடக்கமும் ஸ்கூலிங்கின் முகங்களில் தெரிந்தது," என்று 'த டெய்லி மிரர்' பத்திரிகை கூறியது. "கடைசியாக ஃபெல்ப்சுக்குப் பாடம் புகட்டிய ஜோசஃப் ஸ்கூலிங்," என்ற கார்டியன் செய்தித்தாள், "ஃபெல்ப்சின் கதை ஒரு திருப்பத்துடன் முடிந்திருக்கிறது," என்றது. தனது சிறுவயது கனவு நாயகனையே தோற்கடித்த ஸ்கூலிங் என்பதே பெரும்பாலான பத்திரிகைச் செய்திகளின் கருப் பொருளாக இருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!