‘அடுத்தது உலக சாதனைதான்’

உலகின் மிகச் சிறந்த நீச்சல் வீரராக அறியப்படும் அமெரிக்கா வின் மைக்கல் ஃபெல்ப்சை முந்திச் சென்று ஒலிம்பிக் போட்டி களில் சிங்கப்பூருக்கு முதல் தங்கத்தை வென்று தந்ததால் ஒரே நாளில் உலகம் அறியும் வீரராக உயர்ந்துள்ளார் 21 வயது ஜோசஃப் ஸ்கூலிங். புதிய ஒலிம்பிக் சாதனையுடன் பதக்கம் வென்ற ஸ்கூலிங்கின் இலக்கு இத்துடன் நின்றுவிட வில்லை. 100 மீ. வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் தம்முடைய கனவு நாயகன் ஃபெல்ப்ஸ் படைத்த உலக சாதனையை முறி யடிப்பதை தமது அடுத்த இலக்காக அவர் நிர்ணயித்துள்ளார்.

சாங்கி விமான நிலையத்தில் அமோக வரவேற்பு, தமது சாத னையை அங்கீகரித்து நாடாளு மன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மா னம் ஆகியவற்றால் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ள ஸ்கூலிங், நேற்று தாம் படித்த ஆங்கிலோ சீன தொடக்கப் பள்ளிக்குச் சென்று மாணவர் களைச் சந்தித்தார். தம் பள்ளியின் முன்னாள் மாணவரான அவரது வருகையை எதிர்பார்த்து காலை 7 மணிக்கே மாணவர்கள் அங்கு காத்திருந் தனர். எட்டு மணிக்குச் சற்று முன்னதாக தம்முடைய தாயுடன் அங்கு வந்து சேர்ந்தார் ஸ்கூலிங். தொடக்கநிலை 3 முதல் 6 வரையிலான மாணவர்கள் ஒன்று கூடலுக்காகத் திரண்டிருந்த கூடத்திற்குள் அவர் நுழைந்ததும், "லெட்ஸ் கோ ஸ்கூலிங்" என்ற முழக்கம் அப்பகுதியை அதிரச் செய்வதாக இருந்தது.

தாம் படித்த ஆங்கிலோ சீன தொடக்கப் பள்ளிக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து உரையாடி, வாழ்வில் சாதிக்க அவர்களை ஊக்குவித்ததுடன் அவர்களில் சிலருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் ஒலிம்பிக் தங்க நாயகன் ஜோசஃப் ஸ்கூலிங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!