எப்போதும் இல்லாத வகையில் இம்முறை நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டாளர்களை ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா அனுப்பிய போதும் பதக்கப் பட்டியலில் இன்னும் அதன் பெயர் இடம்பெறா தது சோகத்திலும் சோகம். இந்நிலையில், அந்த சோகத் தைப் போக்கும் நம்பிக்கை நாயகியாக உருவெடுத்துள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, 21.
2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா நேவால் இரண்டாம் சுற்றிலேயே தோற்று வெளியேறிவிட்ட நிலை யில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ள சிந்து நிச்சயம் பதக்கம் பெற்றுத் தருவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. காலிறுதி ஆட்டத்தில் இரண் டாம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் யிகானை கடுமை யான போராட்டத்திற்குப் பிறகு 22=20, 21=19 என்ற நேர் செட் களில் தோற்கடித்தார் பத்தாம் இடத்தில் இருக்கும் சிந்து. கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றிய யிகான், சிந்துவை வீழ்த்திவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக ஆட்டத்தில் சிந்துவின் கையே ஓங்கியிருந்தது. குறிப்பாக, சிந்துவின் வலு வான வீச்சுகள் அவருக்குப் புள்ளிகளைப் பெற்றுத் தந்தன.