பயர்ன் மியூனிக் குழுவில் இந்தியச் சிறுவனுக்கு பயிற்சி

புவனேஸ்வர்: கிரிக்கெட்டையடுத்து காற்பந்து விளையாடுவதற்கான ஆர்வம் இந்தியாவில் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சந்தன் நாயக் (படம்) என்ற சிறுவனுக்கு பயர்ன் மியூனிக் காற்பந்துக் குழுவில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. புவனேஸ்வரில் உள்ள சபர் சகி என்ற சேரிப் பகுதியைச் சேர்ந்த சந்தன், "இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் மிகழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணிக்காக விளையாடுவதே எனது விருப்பம். என் பயிற்சியாளருக்கு நன்றி," என்றும் அர்ஜென்டினா வின் மெஸ்சிதான் தனக்கு உந்துதல் என்றும் கூறினார். சுமார் 120 பேர் கலந்து கொள்ளவுள்ள இம்முகாமில் சந்தன் 2 மாத காலம் பயிற்சி பெறுவார். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சந்தனின் தாயார் வீட்டு வேலை செய்து ஒற்றை பெற்றோராக தனது மகனின் தேவைகளை நிறைவேற்றி வருவதாக அவரது பயிற்சியாளர் ஜெயதேவ் மஹாபத்ரா கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!