தொடர்ந்து வெல்லும் பார்சா

மட்ரிட்: ஸ்பானிய லீக் காற்பந்துப் போட்டியில் பார்சிலோனா குழு 1-0 எனும் கோல் கணக்கில் அட்லெட்டிகோ பில்பாவ்வை தோற் கடித்துள்ளது. இதன் மூலம் லீக் தொடங்கியதிலிருந்து களமிறங் கிய இரண்டு ஆட்டங்களிலும் பார்சிலோனா வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் பார்சிலோனா ஆட்டக்காரர் டேர் ஸ்டேகன் செய்த பிழையால் பில்பாவ் கோல் போட்டிருக்கும். பந்தைத் தவறுதலாக பில்பாவ் ஆட்டக்காரரிடம் அனுப்பிய ஸ்டேகன், நிலைமையைச் சரி செய்யும் வகையில் பந்து கோல் வலைக்குள் போவதைத் தடுத்து நிறுத்தினார். கோல் வலை நோக்கி அனுப்பப்பட்ட பந்து அவரது முகத்தின் மீது பட்டு வெளியானது.

இதை அடுத்து, ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பில்பாவ்வின் பெனால்டி எல்லைக்குள் பார்சிலோ னாவின் டுரான் அனுப்பிய பந்தைத் தலையால் முட்டி கோலாக் கினார் இவான் ரகிடிச். ரகிடிச் அனுப்பிய பந்து மின்னல் வேகத்தில் பில்பாவ் கோல்காப் பாளரைக் கடந்து வலையைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து கோல் போடப் பல பொன்னான வாய்ப்பு கள் கிடைத்தும் அவற்றைக் கோட்டைவிட்டனர் பார்சிலோனா வீரர்கள். பார்சிலோனாவின் நட்சத்திர வீரர்களான லூவிஸ் சுவாரெசும், லயனல் மெஸ்சியும் தங்களுக்குக் கிடைத்த பல வாய்ப்புகளை நழுவவிட்டனர். கோல் போட வலிய வந்த வாய்ப்புகளைத் தவறவிட்ட பார்சிலோனாவுக்கு பில்பாவ் தக்கப் பாடம் புகட்டியிருக்கும்.

பந்துக்காக பில்பாவ் ஆட்டக்காரருடன் போராடும் பார்சிலோனாவின் லூவிஸ் சுவாரெஸ் (நடுவில்). வழக்கமாகக் கோல் மழை பொழியும் சுவாரெசும் மெஸ்சியும் இந்த ஆட்டத்தில் தங்களுக்குக் கிடைத்த பல வாய்ப்புகளை நழுவவிட்டனர். இருப்பினும், பார்சிலோனா வெற்றியை சுவைத்தது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!