ரூனியே மீண்டும் அணித் தலைவர்

லண்டன்: இங்கிலாந்து காற்பந்துக் குழுவின் அணித் தலைவராக வெயின் ரூனி தொடர்ந்து பதவி வகிப்பார் என்று அக்குழுவின் புதிய நிர்வாகி சேம் அலர்டைஸ் அறிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்து படுமோசமாகச் செயல்பட்டது. இதனால் அக் குழுவின் அணித் தலைவராகப் பதவி வகித்த ரூனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். ரூனி இங்கிலாந்துக் குழுவில் இடம்பெறக் கூடாது என்று அதிருப்தி குரல்கள் எழுந்துள்ள போதிலும் ரூனி மீது நம்பிக்கை வைத்து அவரை மீண்டும் அணித் தலைவராக சேம் அலர்டைஸ் அறிவித்துள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை சிலோவாக்கியாவுக்கு எதி ரான ஆட்டத்தில் சேம் அலர்டைசின் தலைமை யின்கீழ் முதல்முறையாக ரூனி களமிறங்கு கிறார். "இங்கிலாந்தின் அணித் தலைவராக ரூனி சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அணித் தலைவர் பொறுப்பில் இருந்து தமது கடமையை அவர் செவ்வனே செய்து வந்திருப்பதால் அவரை மீண்டும் அணித் தலைவராக்க முடிவு எடுப்பது சுலபமாயிற்று. "ரூனி நிகழ்த்தியுள்ள சாதனைகள் அனைவரும் அறிந்ததே. அவர் இங்கிலாந்துக் குழுவில் இடம்பெறும் ஆக மூத்த வீரர். சக வீரர்களால் மதிக்கப்படுபவர். இந்தக் காரணங்கள் அனைத்தும் அவரே அணித் தலைவராவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதைக் காட்டுகிறது," என்று அலர்டைஸ் கூறினார்.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் பிறந்த வீரர்களை இங்கிலாந்து அணியில் சேர்க்கும் நிலை அலர்டைசுக்கு ஏற்பட்டுள்ளது.

அணித் தலைவராகத் தமது பணியைத் தொடரும் ரூனி. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!