‘சேவாக்கின் ஆட்டமே சிறந்தது’

ஜோகனஸ்பர்க்: இப்போதைய நிலையில் உலகின் சிறந்த கிரிக் கெட் ஆட்டக்காரர்களில் ஒருவ ராகக் கருதப்படுபவர் தென்னாப் பிரிக்க அணித் தலைவரான ஏபி டி வில்லியர்ஸ் (படம்). பந்தடிப்பு, பந்துவீச்சு, களக் காப்பு, விக்கெட்காப்பாளர் என கிரிக்கெட்டின் அனைத்துத் துறை களிலும் முத்திரை பதித்து வரும் டி வில்லியர்சின் சுயசரிதை வரும் 8ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஹாக்கி, கோல்ஃப், டென்னிஸ், ரக்பி, நீச்சல் என வேறு பல விளை யாட்டுகளிலும் கால்பதித்தபோதும் இவர் தமது 15 வயதிலிருந்து முழு கவனத்தையும் கிரிக்கெட் மீது செலுத்தத் தொடங்கினார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் (31 பந்துகள்) அடித்து சாதனை புரிந்த இவர், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை 2008ஆம் ஆண்டு சென்னையில் தமது அணிக்கு எதிராக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் 319 ஓட்டங்களை விளாசியதையே தன் வாழ்க்கையில் கண்ட மிகச் சிறந்த ஆட்ட மாகக் கூறுகிறார். "அது அற்புதமான ஆட்டம். சேவாக்கின் அதிரடியைக் கட்டுப்படுத்துவதற்காக எமது அணியின் சுழற்பந்து வீச்சாளர் பால் ஹாரிஸ் பந்துகளை 'லெக் ஸ்டம்ப்'பிற்கு வெளியே வீசினார். ஆயினும், இறங்கி வந்து ஆஃப் சைடில் 'கவர்' திசையில் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் சேவாக். டெஸ்ட் போட்டிகளில் இவ்வாறு விளையாடுவது சாத்தியமே இல்லை. ஆனால், அதையும் செய்துகாட்டினார் சேவாக்," என்று தமது சுயசரிதையில் விவரித்துள்ளார் டி வில்லியர்ஸ். 2008ல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல் எனப்படும் 'இந்திய பிரிமியர் லீக்' டி20 போட்டிகளை அறிமுகம் செய்ததில் இருந்து கிரிக்கெட் விளையாட்டில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!