காற்பந்து: நம்பிக்கை அளிக்கும் இந்தியா

மும்பை: இந்தியக் காற்பந்து அணி யின் பக்கம் கடந்த சில மாதங் களாக அதிர்ஷ்டக் காற்று வீசி வருகிறது. ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 6-1, 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் லாவோசை இருமுறை வீழ்த்திய இந்திய அணி, பின் ஜூன் மாதம் நடந்த நட்புமுறை ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பூட்டானைத் தோற்கடித்தது. இந்த நிலையில், உலகத் தரவரிசையில் தன்னைவிட 36 இடங்கள் முன்னிலையில் உள்ள புயெர்ட்டோ ரிகோ அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஆச்சரியம் அளித்துள்ளது

152ஆம் இடத்தில் இருக்கும் இந்திய அணி. மும்பை அந்தேரி விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடந்த இந்த நட்புமுறை ஆட்டத் தில் கோல்காப்பாளர் குர்பிரீத் சிங் சந்து தலைமையிலான இந்திய அணி 8ஆம் நிமிடத்திலேயே கோலை விட்டுத் தந்தது. இருப்பினும், நாராயண் தாஸ் (18'), சுனில் சேத்ரி (24'), ஜேஜே லால்பெக்லுவா (34'), ஜாக்கிசந்த் சிங் (56') என சீரான இடை வெளியில் நான்கு கோல்களைப் போட்டு வெற்றியை இந்தியா தன்வசமாக்கியது. தன்னைவிடத் தரவரிசையில் மேலுள்ள அணிகளை இந்தியா வெல்வது வெகு அரிது. இந்த நிலையில் புயெர்ட்டோ ரிகோவுக்கு கிடைத்த இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி காற்பந்தில் இனி புதிய உத்வேகம் பெற்று சிறந்த அணிகளில் ஒன்றாக உரு வெடுக்கும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக அமைந்துள்ளது.

பந்தைத் தக்கவைக்க புயெர்ட்டோ ரிகோ வீரர் யுவான் வெலசுடன் (வலது) போட்டியிடும் இந்திய அணியின் சுனில் சேத்ரி. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!