எஃப்1 பந்தயம்: நிக்கோ ராஸ்பர்க் வெற்றி

ரோம்: இத்தாலியில் நடைபெற்ற எஃப்1 கார் பந்தயத்தில் மெர்சடிஸ் அணியின் நிக்கோ ரோஸ்பர்க் வாகை சூடியுள்ளார். சக வீரர் ஹேமில்டன் இரண்டாவது இடத் தைப் பிடித்தார். கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று நடைபெற்ற மூன்று தகுதிச் சுற்றுகள் முடிவில் ஹேமில்டன் முதல் நிலையில் வந்தார். ரோஸ்பெர்க் இரண்டாவது இடம் பிடித்தார். இத்தாலிய எஃப்1 பந்தயத்தை முதல் நிலையில் இருந்து ஹேமில்டன் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் ஹேமில்டன் வெற்றி பெற்று அதிக முன்னிலை பெறுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், ஹேமில்டன் தொடக்கத்தில் பின்தங்கியதால் ரோஸ்பெர்க் முதல் இடம்பிடித்துப் பந்தயத்தை வென்றார். இதில் தோல்வியடைந்தாலும் ஹேமில்டன் 250 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

பந்தயத்தைக் கைப்பற்றிய மெர்சடிஸ் அணியின் நிக்கோ ரோஸ்பர்க் (நடுவில்) மகிழ்ச்சியுடன் கொண்டாட அவருடன் இரண்டாவது இடத்தில் வந்த மெர்சடிஸ் அணியின் லூவிஸ் ஹேமில்டனும் (இடது) மூன்றாவது இடம் பிடித்த ஃபெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டலும் (வலது) உடனிருக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!