புதுப்பிக்கப்பட்ட அரங்கில் புதுத் தெம்புடன் லிவர்பூல்

ஆன்பீஃல்ட்: புதுப்பிக்கப்பட்ட சொந்த அரங்கில் புதுத்தெம்புடன் விளையாடிய லிவர்பூல் காற்பந்துக் குழு நடப்பு வெற்றியாளரான லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவை 4-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு கூடுதலாக 8,500 இருக் கைகள் பொருத்தப்பட்ட ஆன்ஃபீல்ட் அரங்கில் சனிக் கிழமை பின்னிரவு நடைபெற்ற ஆட்டத்தில் மொத்தம் 54,000 ரசிகர்கள் கூடினர். கடந்த காற்பந்துப் பருவத்தின் லீக் வெற்றியாளராகக் களம் இறங்கியது லெஸ்டர் சிட்டி. எனினும் இந்தக் காற்பந்துப் பருவத்தில் சொந்த அரங்கில் முதல் ஆட்டத்தை ஆடிய லிவர்பூல் தனது ரசிகர்களையும் ஏமாற்ற வில்லை. ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்திலேயே முதல் கோலைப் போட்ட ஃபர்பைனியோ லிவர்பூல் ரசிகர்களை ஆரவாரத்தில் மூழ்கச் செய்தார். அதன் பிறகு 31ஆவது நிமிடத்தில் லிவர்பூலின் மானே ஆட்டத்தின் இரண்டாவது கோலைப் போட்டு முன்னிலையை வலுப்படுத்தினார்.

எனினும் ஏழு நிமிடங்கள் கழித்துத் தற்காப்பில் விளையாடிய லூக்கஸ் லீவா எதிரணியின் முன்னணி ஆட்டக்காரர் ஜேமி வார்டியிடம் தவறுதலாக பந்தை இழக்க வார்டி ஆளில்லாத கோல் வலைக்குள் லாவகமாக பந்தைச் செலுத்தி லெஸ்டர் குழுவிற்கு நம்பிக்கையைத் தந்தார். முதல் பாதி ஆட்டம் 2-1 என்ற கோல் கணக்கில் முடிய இரண்டாம் பாதியை முனைப்போடு தொடர்ந் தது லெஸ்டர். ஆனால் லிவர்பூல் குழுவின் அபாரமான ஆட்டத்திற்கு லெஸ்டர் குழுவால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் 56ஆம் நிமிடத்தில் லாலானா உதைத்த பந்து ராக்கெட் போல பறந்து சென்று கோல் வலைக்குள் புகுந்தபோது லெஸ்டர் சிட்டியால் எதுவும் செய்ய முடியவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!