சிங்கப்பூரில் கடுமையான போட்டிக்குத் தயாராகும் ஹேமில்டன், ரோஸ்பர்க்

வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சிங்கப்பூரில் எஃப்1 பந்தயம் நடைபெறவிருக்கிறது. இதல் மெர்சடிஸ் அணியின் நட்சத்திர வீரர்களான நிக்கோ ரோஸ்பர்க், லூவிஸ் ஹேமில்டன் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் ஹேமில்டன் ரோஸ்பர்க்கைவிட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். சிங்கப்பூர் எஃப்1 பந்தயத்தில் ரோஸ்பர்க்குக்கும் தமக்கும் இடையிலான புள்ளிகள் இடைவெளியை அதிகரிக்கும் இலக்கோடு ஹேமில்டன் களமிறங்குவார் என்பது உறுதி. ஒரு கட்டத்தில் ஹேமில் டனைவிட 43 புள்ளிகள் அதிகம் பெற்றிருந்த ரோஸ்பர்க் பெல்ஜியத்திலும் இத்தாலியிலும் வாகை சூடி மீண்டும் முன்னிலை பெறும் வாய்ப்பை நெருங்கி வருகிறார்.

“சிங்கப்பூரில் நடைபெற்ற பந்தயங்கள் எனக்கு வெற்றி யையும் ஏமாற்றங்களையும் தந்து உள்ளன. 2008ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற பந்தயத் தில் முதல் மூன்று இடங்களில் வந்த வீரர்களில் நானும் ஒருவன். ஆனால் அதனைத் தொடர்ந்து இங்கு நடைபெற்ற பந்தயங்களில் நான் வெற்றியை சுவைத்ததே இல்லை. இந்த நிலையை வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மாற்ற விரும்புகிறேன்,” என்றார் ரோஸ் பர்க். சிங்கப்பூரில் இதுவரை நடை பெற்றுள்ள பந்தயங்களில் இரு முறை வென்றுள்ள ஹேமில்டன் இம்மறை முதலிடத்துக்குக் குறி வைத்துள்ளார். “சிங்கப்பூரின் வெப்பமும் ஈரத் தன்மையும் சவால்மிக்கவை. ஆனால் இங்குள்ள பந்தயத் தடத்தில் போட்டியிடுவதை நான் விரும்புகிறேன்,” என்று ஹேமில் டன் கூறினார்.

எஃப்1 பந்தயத்தின் மகுடத்துக்குக் குறி வைத்து ஒருவரை ஒருவர் மிஞ்சும் முனைப்புடன் இருக்கும் ரோஸ்பர்க் (இடது), ஹேமில்டன். படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next