பார்சா, பயர்ன் கோல் மழை

பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பார்சிலோனாவும் பயர்ன் மியூனிக்கும் கோல் மழை பொழிந்து அனைவரும் மெச்சும் வகையில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. ஸ்காட்லாந்தின் செல்ட்டிக் குழுவுக்கு எதிராகக் களமிறங்கிய ஸ்பானிய ஜாம்பவான் பார்சிலோனா 7=0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. மெஸ்சி மூன்று கோல்களும் சுவாரெஸ் இரண்டு கோல்களும் நெய்மார், இனியேஸ்டா தலா ஒரு கோலும் போட்டு செல்ட்டிக்கின் கதையை முடித்து வைத்தனர்.

ஆட்டம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனாவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் செல்ட் டிக் தவித்தது. மற்றோர் ஆட்டத்தில் ஜெர்மனி யின் பயர்ன் மியூனிக் ரஷ்யாவின் ரோஸ்டோவ் குழுவை 5=0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது. பயர்ன் குழுவுக்காக ஜோஷ்வா கிம்மிச் இரண்டு கோல்களும் தாமஸ் மியூலர், லெவன்டாவ்ஸ்கி, பெர்னாட் ஆகியோர் தலா ஒரு கோலும் போட்டனர். ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயர்னின் முதல் கோலை லெவன் டாவ்ஸ்கி போட்டார். இடைவேளைக்கு சில வினாடி களே இருந்தபோது மியூலர் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. இடைவேளையின்போது பயர்ன் மியூனிக் 2=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதி ஆட்டத்தில் மேலும் மூன்று கோல்களைப் போட்டு ரோஸ்டோவ் அணியை பயர்ன் திக்குமுக்காட வைத்தது. மற்றோர் ஆட்டத்தில் ஆர்ச னலும் பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேனும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. பிஎஸ்வி ஐன்ஹோவனுக்கு எதிரான ஆட்டத்தை 1=0 எனும் கோல் கணக்கில் அட்லெட்டிகோ மட்ரிட் கைப்பற்றியது.

பந்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு செல்ட்டிக் வீரர்களை எளிதில் கடந்து செல்லும் மெஸ்சி (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next