ராய்க்கொனன்: எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம்

மரினா பே ஸ்திரீட் பந்தயத் தடத்தில் நடந்த 2015 சிங்கப்பூர் கிராண்ட் பிரீயில் ஃபெராரி குழு சார்பில் பங்கேற்ற இருவரும் வெற்றி மேடையை அலங்கரித் தனர். செபாஸ்டியன் வெட்டல் வெற்றியாளர் பட்டத்தைக் கைப் பற்ற, கிமி ராய்க்கொனன் மூன்றாமிடம் பிடித்தார். இந்நிலையில், இந்தப் பருவத் தில் ஃபெராரி குழு இதுவரை ஒரு பந்தயத்தில்கூட வாகை சூடவில்லை. ஆயினும், கடந்த முறை சிங்கப்பூரில் சோபித்ததால் இம்முறையும் எளிதாக வென்று விடலாம் என்று தாங்கள் நினைக்கவில்லை என்று கூறியுள் ளார் ஃபின்லாந்து நாட்டவரும் 2007 ஒட்டுமொத்த வெற்றியாள ருமான ராய்க்கொனன். “சென்ற ஆண்டில் எங்களது செயல்பாடு வலுவாக இருந்தது. அதனால் இந்த ஆண்டும் எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று அர்த்தமில்லை. எங்களால் முடிந்த அளவிற்குச் சிறப்பாகச் செயல்படுவோம்,” என்றார் அவர்.

சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த ‘ஷெல் ஈக்கோ மெரத்தான்’ வாகன வடிவமைப்புப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடிய ஃபெராரி குழு எஃப்1 வீரர் கிமி ராய்க்கொனன் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next