சாம்பியன்ஸ் லீக்: அகுவேரோ ‘ஹாட்ரிக்’

மான்செஸ்டர்: நடப்புக் காற்பந்துப் பருவத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு வீரர் செர்ஜியோ அகுவேரோ வின் அதிரடித் தாக்குதல் தொடர் கிறது. மழை காரணமாக 24 மணி நேரம் தள்ளி வைக்கப்பட்ட நிலை யில், சாம்பியன்ஸ் லீக் ‘சி’ பிரிவு ஆட்டத்தில் அகுவேரோ அடித்த ‘ஹாட்ரிக்’ கோல்களால் சிட்டி குழு 4=0 என்ற கணக்கில் ஜெர் மனியின் பொருஸியா மன்சென் கிளாட்பாக் குழுவைத் தோற்கடித் தது. நேற்று அதிகாலை நடந்த இந்த ஆட்டத்தின் ஒன்பதாம் நிமிடத்தில் தனது கோல் வேட்டையைத் தொடங்கிய அகுவேரோ, 28வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் தவறவிடவில்லை. பிறகு 77வது நிமிடத்தில் மீண்டும் ஓர் அற்புதமான கோலை அடித்து தனது ‘ஹாட்ரிக்’கை அவர் நிறைவு செய்தார்.

இதன்மூலம் இந்தப் பருவத்தில் தான் ஆடிய ஐந்து ஆட்டங்களில் மொத்தம் ஒன்பது கோல்களை அடித்துள்ளார் அகுவேரோ. ஆட்டம் முடியும் தறுவாயில் அகுவேரோவிற்குப் பதிலாக மாற்று வீரராகக் களமிறங்கிய இகியனாச்சோ வலைக்கு மிக அருகே இருந்து பந்தை எதிரணி யின் வலைக்குள் தள்ளி சிட்டி குழுவின் கோல் எண்ணிக்கையை நான்காக உயர்த்தினார்.

Loading...
Load next