யூரோப்பா லீக்: மேன்யூ அதிர்ச்சித் தோல்வி

லண்டன்: யூரோப்பா லீக் முதல் சுற்று ஆட்டத்தில் ஹாலந்தின் ஃபயர்னோர்ட் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனை டெட் 1=-0 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. யூரோப்பா லீக் முதல் சுற்று ஆட்டத்தில் முதல்முறையாகக் களமிறங்கிய யுனைடெட்டின் தாக்குதல் வழக்கத்துக்கு மாறாக எதிரணியை அச்சுறுத்த தவறியது. பிற்பாதி ஆட்டத்தில் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் சிலாட்டான் இப்ராகிமோவிச் வந்தும் யுனைடெட்டால் இறுதி வரை கோல் போட முடியாமல் போனது.

மாறாக ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் ஃபயர்நோர்ட் குழுவின் வில்ஹேனா அனுப்பிய பந்து யுனைடெட் கோல்காப்பாளர் டி கியாவைக் கடந்து சென்று வலையைத் தீண்டியது. கடந்த ஆறு நாட்களில் இதுவே யுனைடெட் சந்தித்துள்ள இரண்டாவது தோல்வி. அண்மையில் நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியிடம் அது 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. மற்றோர் ஆட்டத்தில் மூன்று முறை யூரோப்பா கிண்ணத்தை ஏந்திய இத்தாலியின் இண்டர் மிலான் குழுவும் யாரும் எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்தது.

ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் ஃபயர்நோர்ட் குழுவின் வில்ஹேனா (இடது) அனுப்பிய பந்து வலைக்குள் சென்றது. பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க யுனைடெட் கோல்காப்பாளர் டி கியா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ஏஎஃப்பி

Loading...
Load next