பின் சியூவுக்கு இரண்டாம் தங்கம்

ரியோ டி ஜெனிரோ: உடற்குறையுள் ளோருக்கான ஒலிம்பிக் போட்டி யில் (பாராலிம்பிக்) சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தசை குறைப்பாட்டினால் பாதிக் கப்பட்டுள்ள 24 வயது யிப், பெண்களுக்கான 50 மீட்டர் மல்லாந்து நீந்துதல் போட்டியில் முதலிடம் பிடித்துத் தங்கம் வென்றார். இதன் விளைவாக பாராலிம்பிக் போட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட தங்கப் பதக்கம் வென்ற முதல் சிங்கப்பூரர் எனும் பெருமை இவரைச் சேரும். இந்தப் பந்தயத்தை ஒரு நிமிடம் 33 வினாடிகளில் யிப் முடித்தார். வெள்ளிப் பதக்கத்தைச் சீனாவும் வெண்கலத்தை உக்ரேனும் வென்றன.

கடந்த வாரம் பெண்களுக்கான 100 மீட்டர் மல்லாந்து நீந்துதல் நீச்சல் போட்டியிலும் யிப் தங்கம் வென்று புதிய உலகச் சாதனை நேரத்தையும் படைத்தார். யிப்பின் மீள்திறனையும் முனைப்பையும் அதிபர் டோனி டான் கெங் யாம் பாராட்டியுள்ளார். “பின் சியூவின் விளையாட்டுப் பயணம் சுலபமானதன்று. சவால் கள் நெருக்குதல் தந்தபோதும் பின் சியூ விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போராடினார். அவரது மீள்திறனும் முனைப்பும் மெச்சக் கூடியவை. அவரது கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் பலன் அடைந்துள்ளன. சிங்கப்பூருக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்,” என்று அதிபர் டான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் புகழாரம் சூட்டினார். பிரதமர் லீ சியன் லூங்கும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் யிப்பைப் பாராட்டியுள்ளார்.

50 மீட்டர் மல்லாக்கப்பாணி நீச்சல் போட்டியில் வென்று தங்கம் வென்ற யிப் பின் சியூவுடன் அவரது பயிற்றுவிப்பாளர் கொண்டாடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next