எஃப்1: முதல் பயிற்சி சுற்றில் வெஸ்டர்ப்பன் முதலிடம்

சிங்கப்பூரில் நாளை நடைபெறும் எஃப்1 பந்தயத்துக்கு முன்பு நேற்று மாலை முதல் பயிற்சி சுற்று நடத்தப்பட்டது. இதில் ரெட் புல் அணியைச் சேர்ந்த 18 வயது ஓட்டுநர் மேக்ஸ் வெஸ்டர்ப்பன் முதலிடத்தைப் பிடித்தார். பயிற்சி சுற்றை முடிக்க வெஸ்டர்ப்பன் ஒரு நிமிடம் 45.833 வினாடிகள் எடுத்துக்கொண்டார். ரெட் புல் அணியைச் சேர்ந்த மற்றொரு ஓட்டுநரான டேனியல் ரிச்சியார்டோ இரண்டாவது நிலையில் வந்தார். சிங்கப்பூரில் இதுவரை நடைபெற்ற பந்தயங்களில் நான்கு முறை வென்ற ஃபெராரியின் செபாஸ்டியன் வெட்டல் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். மெர்சடிஸ் அணியின் லூவிஸ் ஹேமில்டன் நான்காவது இடத்திலும் நிக்கோ ரோஸ்பர்க் ஐந்தாவது இடத்திலும் முதல் பயிற்சி சுற்றை முடித்தனர்.

Loading...
Load next