செல்சியை வீழ்த்திய லிவர்பூல்

லண்டன்: செல்சிக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் லிவர்பூல் 2=1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற் றுள்ளது. எதிரணியின் விளையாட்டரங் கத்தில் விளையாடியபோதும் ஆட்டம் தொடங்கியதிலிருந்து லிவர்பூல் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் லிவர்பூலின் முதல் கோல் புகுந்தது. டேஜான் லோவ்ரென் அனுப்பிய பந்து வலையைத் தொட்டதும் செல்சி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதற்குள் ஆட்டத் தின் 36வது நிமிடத்தில் ஜோர்டன் ஹெண்டர்சன் செல்சியின் கோல் கம்பத்துக்கு மிக தொலை விலிருந்து அனுப்பிய பந்து வலைக்குள் சென்றது.

ஆட்ட இடைவேளையின்போது லிவர்பூல் 2=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதியில் ஆட்டத்தை எப்படியும் சமன் செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது செல்சி. ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் செல்சியின் டியேகோ கோஸ்டா கோல் போட்டார். இன்னும் ஒரு கோல் போட்டால் தோல்வியின் விளிம்பிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்த செல்சி ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. செல்சியின் கோல் முயற்சி களைப் பிடிவாதமாக இருந்து முறியடித்த லிவர்பூல், முன்னி லையைத் தக்கவைத்துக்கொண்டு வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றி மூலம் லீக் பட்டியலில் செல்சிக்கும் எவர்ட்டனுக்கும் நிகராக லிவர்பூல் புள்ளிகள் பெற்றுள்ளது. லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் மான்செஸ்டர் சிட்டியைவிட (12 புள்ளிகள்) லிவர்பூல் இரண்டு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.

லிவர்பூல் அணியின் கோல் முயற்சியைத் தடுத்து நிறுத்த பந்தை நோக்கிப் பாயும் செல்சி கோல்காப்பாளர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!