களைகட்டிய சமூக விளையாட்டு தினம்

சிங்கப்பூர் விளையாட்டு மையத்தின் சமூக விளையாட்டு தினத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் நேற்றுக் காலை அங்கு திரண்டனர். 55,000 பேர் அமரக்கூடிய விளை யாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் சிறப்பு அம்சமாக ஸும்பா உடற்பயிற்சி நடத்தபப்பட்டது. இதில் 3,248 ஸும்பா ஆர்வலர்கள் ஈடுபட்டனர். தேசிய விளையாட்டரங்கத்தில் ஒரே நேரத்தில் இத்தனை பேர் ஒன்றாக ஸும்பா உடற்பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை. வாரந்தோறும் தேசிய விளையாட்டரங் கத்துக்கு வெளியே ஸும்பா வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிகழ்வை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் அதிகாரபூர்வமாக நேற்று தொடங்கி வைத்தார். ஸும்பா உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு விளையாட்டரங்கத்தில் கூடியிருந்த வர்களிடம் அவர் பேசினார். துடிப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பது, குடும்பத்துடன் நேரம் செல வழிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். சமூக விளையாட்டு தினத்தை முன்னிட்டு 10 வயதுக்கும் 12 வயதுக்கும் உட்பட்டோருக்கான காற்பந்துப் போட்டிகளும் நடத்தப்பட்டன. மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளோ ருக்கான சங்கம் போன்ற ‘ஓசிபிசி கேர்ஸ்’ திட்டத்தால் பலன் அடையும் ஏறத்தாழ 300 அமைப்புகளும் நிகழ்வில் பங்கெடுத்தன.

தேசிய விளையாட்டரங்கத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆக அதிகமானோர் ஸும்பா உடற்பயிற்சியில் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next