சிங்கப்பூரில் ரோஸ்பெர்க்கின் முதல் வெற்றி

சிங்கப்பூர் கிராண்ட் பிரீ ஃபார்முலா-1 இரவு நேர கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் குழுவின் நிக்கோ ரோஸ் பெர்க் வாகை சூடினார். அவருக்கு அடுத்த நிலையில் ரெட்புல் குழுவின் டேனியல் ரிக்கார்டோவும் மூன்றாவதாக மெர்சிடிஸின் லூயிஸ் ஹேமில்டனும் வந்தனர். சிங்கப்பூர் ஒன்பதாவது முறையாக ஏற்று நடத்தும் இப்பந்தயம் நேற்று இரவு மரினா பே பந்தயத் தடத்தில் நடந்தது. சிங்கப்பூர் கிராண்ட் பிரீயை ரோஸ்பெர்க் வெல்வது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. படம்: திமத்தி டேவிட்

Loading...
Load next