எஃப்1: இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

ஃபார்முலா1 கார் பந்தயத்தை சிங்கப்பூரில் நடத்துவதற்கான ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், அந்த ஒப்பந் தத்தை மேலும் நீட்டிப்பது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து வரு கிறது என்றும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ்.ஈஸ்வரன் தெரிவித் துள்ளார். அபுதாபி=சிங்கப்பூர் கூட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்ட அமைச்சர் ஈஸ்வரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு சொன்னார். எஃப்1 பந்தயங்களுக்கான உரிமை ‘சிவிசி கேப்பிட்டல்’ நிறு வனத்திடமிருந்து ‘லிபர்ட்டி மீடியா’ நிறுவனத்திற்குக் கைமாறவுள்ள நிலையில், சிங்கப்பூர் கிராண்ட் பிரீ நீட்டிப்புத் தொடர்பான பேச்சு வார்த்தையை விரைவுபடுத்த வேண்டிய தேவையில்லை என்றார் திரு ஈஸ்வரன். “எஃப்1 பந்தயங்களுக்குப் புதிய உரிமையாளர்கள் வரவிருக் கின்றனர். அவர்களுக்குப் போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும். அவர்களது கொள்கைகள், கோரிக்கைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, தெளிவாக, கவனமாக ஆராய்ந்த பின்னரே புதிய ஒப்பந்தம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

இந்த நாளுக்குள் ஒப்பந்த நீட்டிப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கால வரையறையை நிர்ணயிக்க இய லாது,” என்றும் அவர் சொன்னார். முன்னதாக, ‘லிபர்ட்டி மீடியா’ நிறுவன உரிமையாளர்களையும் இப்போதைய எஃப்1 தலைவர் பெர்னி எக்ளஸ்டோனையும் பல குழுக்களின் முதல்வர்களையும் கடந்த வார இறுதியில் திரு ஈஸ்வரன் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே, நேற்று முன் தினம் நடந்த சிங்கப்பூர் கிராண்ட் பிரீயில், ஒழுங்குபடுத்தும் பணி யாளர் ஒருவர் பந்தயத் தடத்தில் இருந்தபோதே பந்தயத்தை மீண்டும் தொடங்க அனுமதித்தது குறித்து விசாரிக்கப்படும் என்று அனைத்துலக மோட்டார் வாகனக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Loading...
Load next