பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு

159 நாடுகள், 4,342 போட்டியாளர்கள், 22 விளையாட்டுகளில் 528 போட்டிகள் என்று கடந்த 12 நாட்களாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் களைகட்டிய உடற்குறையுள்ளோருக்கான பாராலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலக விளையாட்டுத் திருவிழாவின் நிறைவு விழா புகழ்பெற்ற மரக்கானா காற்பந்து விளையாட்டரங்கத்தில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடந்தேறியது. போட்டிகளில் பங்கேற்ற அனைத்து விளையாட்டாளர்களும் திடலில் அமர்ந்திருக்க, கண்ணைக் கவரும் வாணவேடிக்கைகளுடன் தொடங்கியது இந்த விழா. பிறக்கும்போதே இரு கைகளும் இல்லாமல் பிறந்தபோதும் பெயர் பெற்ற இசைக் கலைஞராக விளங்கும் ஜோனதன் பேஸ்டோஸ் (வலது படம்) கால் விரல்களாலேயே கீபோர்ட், கிட்டார் இசைக் கருவிகளை வாசித்துக் காட்டி அரங்கில் திரண்டிருந்த பார்வையாளர்களையும் விளையாட்டாளர்களையும் அதிசயிக்க வைத்தார். படங்கள்: ராய்ட்டர்ஸ், ஏஃப்பி

Loading...
Load next