போட்டியாளர்களை வரவேற்க விமான நிலையத்தில் திரண்ட மக்கள்

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்ற சிங்கப்பூர் போட்டியாளர்கள் நேற்று காலை நாடு திரும்பினர். சிங்கப்பூர் ஏர்லைன்சின் ‘எஸ்கியூ 67’ விமானத்தில் வந்த வெற்றியாளர்களான யிப் பின் சியூ (வலது), திரேசா கோ (இடது) உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு ‘வாட்டர் கேனன்’ என்ற நீர் பாய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க சுமார் 200 பேர் திரண்டிருந்தனர். இப்போட்டிகளில் சிங்கப்பூருக்கு பெருமை சேர்ந்த வீரர்களுக்கு சனிக்கிழமை வெற்றி ஊர்வலம் நடத்தப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next