கூடுதல் நேரத்தில் வெற்றியை எட்டிப் பிடித்த செல்சி

லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டியுடன் மோதியது செல்சி. முதல் பாதி ஆட்டத்தில் பின் தங்கி இருந்த செல்சி குழு -கூடுதல் நேரத்தில் போட்ட கோல் களால் லெஸ்டர் சிட்டி குழுவை 2=4 என்ற கோல் கணக்கில் வென்றது. லெஸ்டர் சிட்டியின் சின்ஜி ஒகசாகி தலையால் முட்டி முதல் கோலைப் போட்டார். ஆட்டம் தொடங்கிய 17வது நிமிடத்தில் போடப்பட்ட அந்த கோலை அடுத்து, 34வது நிமிடத்தில் மீண்டும் அவர் போட்ட கோலால் லெஸ்டர் 2 கோல்கள் முன்னிலை பெற்றது. ஆனால் செல்சியின் கேரி கேஹில், இடைவேளை நேரத்திற்கு சற்றுமுன் தன் குழுவிற்கான முதல் கோலைப் போட்டார். பிற்பாதி ஆட்டத்தின்போது 49வது நிமிடத்தில், செல்சியின் அஸ்பிலிகியூட்டா இரண்டாவது கோலை போட்டு சமன் செய்தார்.

இந்நிலையில் லெஸ்டர் சிட்டி யின் வைஸ்லெவிஸ்கி முழங்கை யால், செல்சி ஆட்டக்காரர் டியேகோ கோஸ்டாவைக் காயப் படுத்தியதால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத்தொடர்ந்து, செல்சி யின் ஃபேப்ரிகஸ் கூடுதல் நேரத் தின்போது போட்ட இரண்டு கோல்கள், அக்குழு 2=4 என்ற கோல் கணக்கில் லெஸ்டரை வீழ்த்த உதவியது. இரு குழுக்களும் வெற்றியை எட்டிப் பிடிக்கும் நிலையில் இருந்தபோது, வைஸ்லெவிஸ்கி வெளியேற்றப்பட்டது லெஸ்டருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப் பட்டது. கடந்த பருவத்தில் சிறப்பான தாக்குதல், தற்காப்பு ஆட்டத்தின் மூலம் லீக் கிண்ணத்தை வென்ற லெஸ்டர் குழு இந்த ஆட்டத்தில் தோற்றாலும் இனிவரும் ஆட்டங் களில் அவர்கள் சிறப்பாக விளை யாடுவார்கள் என்ற நம்பிக்கையை நிர்வாகி ரெனியேரிக்கு அளிக்கும் விதமாகவே நேற்றைய ஆட்டம் இருந்தது.

 

வெற்றியை உறுதி செய்த நான்காவது கோலைப் போட்ட செல்சியின் ஃபேப்ரிகஸ். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மால்ட்டா உடனான ஆட்டத்தில் பந்தைத் தன்வசம் கட்டுப்படுத்தும் ஸ்பானிய ஆட்டக்காரர் அல்வாரோ மொராட்டா (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2019

யூரோ 2020 தகுதிச் சுற்று ஆட்டங்கள்: ஸ்பெயின் காட்டில் கோல் மழை

ஆட்டத்திற்கான வெற்றிக் கிண்ணம் அர்ஜெண்டின வீரர் மெஸ்ஸியிடம் (நடுவில்) வழங்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி

டெஸ்ட் போட்டியின் வெற்றியை ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து கொண்டாடும் விராத் கோஹ்லி (இடது). படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

முதல் டெஸ்ட்டை கைப்பற்றியது இந்திய அணி