மேன்யூ-மேன்சிட்டி மோதல்

மான்செஸ்டர்: இந்தப் பருவத் துக்கான இங்கிலிஷ் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி ஆகிய இரண்டு குழுக்களில் ஏதாவது ஒரு குழு மட்டுமே தகுதி பெற முடியும். நான்காவது சுற்று ஆட்டத்தில் இவ்விரண்டு குழுக்களும் சந்திப்பதே இதற்குக் காரணம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் குழு லீக் கிண்ணப் பயணத்தைத் தொடரும். தோல்வியைத் தழுவும் குழு வின் லீக் கிண்ணக் கனவு ஒரு முடிவுக்கு வரும்.

நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தின் மூன்றாவது நிலை லீக்கில் விளையாடும் நார்த் தாம்டன் டவுனை 3-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியது. கடந்த சில ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்து வந்த யுனைடெட் குழுவுக்கு இந்த வெற்றி சிறிது நிம்மதியைத் தந்துள்ளது என்றால் அது மிகையன்று. அண்மையில் வாட்ஃபோர்ட் குழுவிடம் தோல்வியைத் தழுவிய போது யுனைடெட் குழுவுக்காக களமிறங்கியிருந்த பல ஆட்டக் காரர்கள் இம்முறை விளையாட வில்லை.

யுனைடெட்டின் மொரின்யோ (இடது) மற்றும் சிட்டியின் கார்டியோலா (வலது) ஆகியோர் இடையிலான வியூகப் போர் காலிறுதிக்கு எந்தக் குழு காலடி எடுத்து வைக்கும் என்பதை நிர்ணயிக்கும். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்துலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த தீபக் சாஹர். படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் முகம்மது சாலா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்