ரனியேரி: லெஸ்டர் சிட்டியில் வெய்ன் ரூனிக்கு இடமில்லை

மான்செஸ்டர்: இங்கிலாந்து காற்பந்து அணித் தலைவரும் மான்செஸ்டர் யுனைடெட் (மேன்யூ) குழு ஆட்டக்காரருமான வெய்ன் ரூனியின் (படம்) ஆட்டம் இந்தப் பருவத்தில் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. ஆகையால், மேன்யூவில் அவருக்கு வாய்ப்புத் தரக்கூடாது என்று எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில், காற்பந்தில் ரூனி படைத்த சாதனைகளுக்காக அவரை மெச்சுவதாகக் குறிப்பிட்டுள்ளார் லெஸ்டர் சிட்டி குழு நிர்வாகி கிளாடியோ ரனியேரி. ஆயினும், ஒருவேளை ரூனி மேன்யூவிலிருந்து நீக்கப்படும் பட்சத்தில் அவருக்கு லெஸ்டர் குழுவில் இடமளிக்க வாய்ப்பே இல்லை என்றும் ரனியேரி கூறியுள்ளார்.

“ரூனி அற்புதமான ஆட்டக் காரர். அவர் ஒரு வெற்றியாளர். ஆனால் லெஸ்டர் வீரர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். யாருக்காகவும் அவர்களை நான் மாற்றமாட்டேன்,” என்றார் அவர். இவ்வார மத்தியில் நடந்த லீக் கிண்ண ஆட்டத்திற்குமுன் தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் மேன்யூ தோற்றிருந்தது. அதற்கு ரூனியும் ஒரு காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்துக் கருத்துரைத்த ரூனி, “நான் என்னுடைய பயிற்றுவிப்பாளர்கள், சக வீரர்களின் சொற்களுக்கு மட்டுமே செவிமடுப்பேன். மற்றவர்கள் சொல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை,” என்று கூறினார். இந்நிலையில், நடப்பு வெற்றியாளரான லெஸ்டர் சிட்டியுடன் மேன்யூ இன்றிரவு பொருதுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்

டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, மீண்டும் அணிக்குத் திரும்பி சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டது சிறப்பான தருணம் என தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆதிக்கத்தைத் தொடர இந்தியா முனைப்பு