நியூசி. வலுவான அடித்தளம்

கான்பூர்: மழை குறுக்கிட்ட முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன் னிங்சில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங் களை எடுத்துள்ளது. மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக கேன் வில்லியம்சன் தலைமை யிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா சென்றுள்ளது. கான்பூரில் நேற்று முன்தினம் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி யது. பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி முதலில் தமது அணி பந்தடிக்கும் என அறிவித்தார். முரளி விஜய்- லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங் கினர். ராகுல் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோதும் புஜாராவும் விஜய்யும் இணைந்து அணியைத் தூக்கி நிறுத்தினர். ஆனால், புஜாரா 62, விஜய் 65 ஓட்டங்களில் வெளியேறியதை அடுத்து இந்திய அணி தள்ளாடத் தொடங்கியது.

ரோகித் சர்மா (35), அஸ்வின் (40) என இருவர் மட்டுமே சற்று தாக்குப் பிடித்தனர். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த தால் முதல் நாள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 291 ஓட்டங் களை எடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய அணி யின் கடைசி இணையான ரவீந்திர ஜடேஜாவும் உமேஷ் யாதவும் நேற்று இரண்டாம் நாளில் விரை வாக ஓட்டங்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆயினும் அவ்விருவராலும் இணைந்து ஏழு ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது. இறுதியில் 318 ஓட்டங் களுக்கு இந்தியா தனது முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது. ஜடேஜா 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ரோஜர் ஃபெடரரை 6-3, 6-4 என வீழ்த்திய ஆறாம் நிலை வீரரான கீரிஸ் நாட்டின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ். படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

ஃபெடரரை வீழ்த்திய ஸிட்ஸிபாஸ்

பங்ளாதேஷ் அணியின் ஏழு விக்கெட்டுகளைச் சாய்த்த வேகப் பந்துவீச்சாளர்
முகமது ஷமியைப் பாராட்டும் அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

18 Nov 2019

விக்கெட்டுகளை அள்ளும் பந்துவீச்சாளர்களை பாராட்டும் கோஹ்லி

சக வீரரை வசைபாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஓர் ஆட்டம் தடை விதிக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

18 Nov 2019

சக வீரரை வசைபாடிய பேட்டின்சனுக்கு தடை