சிக்கினார் சேம் அலர்டைஸ்

லண்டன்: முதலீட்டாளர்களைப் போல வேடமிட்டு வந்த தி டெய்லி டெலிகிராஃப் செய்தியாளர்களிடம் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் ஆட்டக்காரர்கள் குழு மாறுவது தொடர்பான விதிமுறைகளை முறியடிப்பது குறித்து இங்கிலாந்து காற்பந்துக் குழுவின் நிர்வாகி சேம் அலர்டைஸ் ஆலோசனை வழங்கியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்தச் சந்திப் பின்போது இங்கிலாந்தின் முன்னாள் நிர்வாகி ரோய் ஹாட்சனின் பேச்சுத்திறன் குறைபாடு குறித்து அலர்டைஸ் கிண்டல் செய்ததைச் செய்தியாளர்கள் ரகசியமாகப் படமெடுத்தனர். இங்கிலாந்துக் காற்பந்துச் சங்கத்தின் விதிமுறைகளை ஓரங்கட்டி மூன்றாவது தரப்பினர்களால் ஆட்டக்காரர்கள் சொந்தம் கொண்டாடப்படுவதைத் தடுக்கலாம் என்றும் அலர்டைஸ் குறிப்பிட்டதாக அறியப்படுகிறது. இங்கிலாந்துக் காற்பந்துக் குழுவின் நிர்வாகியாகக் கடந்த ஜூலை மாதம் பதவி ஏற்ற அலர்டைஸ், வந்தவர்கள் செய்தியாளர்கள் என்று தெரியாமல் அவர்கள் முதலீட்டாளர்கள் என்று நம்பி 400,000 பவுண்ட் கொடுத்தால் அவர்களது நிறுவனத்தின் தூதராக சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் பயணம் மேற்கொள்ள இணக்கம் தெரிவித்ததாக நம்பப்படுகிறது.

இங்கிலிஷ் காற்பந்துச் சங்கத்தின் விதிமுறைகளை முறியடிப்பது பற்றி சேம் அலர்டைஸ் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்