இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கௌதம் காம்பீர்

கோல்­கத்தா: இந்தியா- நியூ­சி­லாந்து அணிகள் மோதும் இரண்டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டிக்­கான இந்திய அணியில் ராகு­லுக்கு பதில் கௌதம் காம்பீர் (படம்) சேர்க்கப்பட்டுள்ளார். நியூ­சி­லாந்து கிரிக்­கெட் அணி இந்­தி­யா­வில் சுற்­றுப்­ப­ய­ணம் செய்து விளையாடி வரு­கிறது. இரு அணிகள் இடை­யே­யான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கான்­பூ­ரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்­தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா, நியூ­சி­லாந்து அணி கள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை கோல்­கத்தா ஈடன் கார்டன் மைதா­னத்­தில் தொடங்­கு­கிறது. இந்த டெஸ்ட் போட்­டிக்­கான இந்திய அணியில் கௌதம் காம்பீர் இடம்­பெற்­றுள்­ளார். தொடக்­க ­வீ­ரர் ராகுல் காயம் அடைந்­துள்­ள­தால் அவ­ர் சேர்க்கப்பட்டுள்ளார். 34 வயதான கௌதம் காம்பீர் 2 ஆண்­டு­களுக்­குப் பிறகு இந்திய அணிக்­குத் தேர்வாகி இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கடை­சி­யாக 2014ஆம் ஆண்டு லண்டனில் நடந்த டெஸ்ட் போட்டி யில் விளை­யா­டினார் அவர். நாளைய போட்டியில் முரளி விஜய்­யு­டன் இணைந்து தொடக்க வீரராக அவர் களமிறங்குவார் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!