லெஸ்டரின் இரண்டாவது தொடர் வெற்றி

இங்­கி­லீஷ் பிரி­மி­யர் லீகில் தனது தோல்­வி­களைப் பின்­னுக்­குத் தள்­ளி­விட்டு வெற்­றி­யா­ளர் கிண்ணப் போட்­டி­யில் தனது இரண்டா­வது தொடர் வெற்­றியைப் பதிவு செய்­துள்­ளது நடப்பு பிரி­மி­யர் லீக் வெற்­றி­யா­ள­ரான லெஸ்டர் சிட்டி. நேற்று அதிகாலை தனது சொந்த அரங்­கில் நடந்த ஆட்­டத்­தில் போர்ட்டோ குழுவை எதிர்த்து ஆடியது லெஸ்டர். ஆட்­டத்­தின் முற்­பா­தி­யில் ரியாட் மாஹ்ரேஸ் கொடுத்த பந்தைக் கோலாக்­கினார் இஸ்லாம் ஸ்லிமானி. அந்த ஒரே கோல் வெற்றி கோலா­க­வும் அமைந்தது. ஸ்மாலினி சென்ற மாதம்­தான் ஸ்போர்ட்­டிங் லிஸ்பன் குழு­வி­லி­ருந்து லெஸ்டர் குழுவில் இணைந்தார். அவர் போட்ட கோல் மூலம் சாம்­பி­யன்ஸ் லீகில் இரண்டு வெற்­றிகளைப் பெற்று ஆறு புள்­ளி­களு­டன் ‘G’ பிரிவில் முத­லி­டத்தைப் பிடித்­துள்­ளது லெஸ்டர்.

இந்த ஆட்­டத்­திற்கு முன் கடந்த வாரம் பிரி­மி­யர் லீகில் மேன்­செஸ்டர் யுனைடெட்­டி­டம் 4=1 என்ற கோல் கணக்­கில் தோற்­றி­ருந்தது லெஸ்டர். ஆனால் அந்தத் தோல்­வி­யின் சோர்வு தெரி­யா­மல் போர்ட்­டோ­வுக்கு எதி­ரா­கத் துடிப்­பு­டன் ஆடியது லெஸ்டர். இதற்­கிடை­யில், மாஸ்­கோ­வில் நடை­பெற்ற ‘E’ பிரிவு ஆட்­ட­மொன்­றில் சிஎஸ்­கேஏ மாஸ்கோ குழுவை அதன் சொந்த அரங்­கில் ஒன்­றுக்­குப் பூஜ்யம் எனத் தோற்­க­டித்­தது பிரி­மி­யர் லீக் குழுவான டோட்­டன்­ஹம். இப்­ப­ரு­வத்­தில் டோட்­டன்­ஹ­மில் புதிதாக இணைந்த தென் கொரிய விளை­யாட்­டா­ள­ரான சன் ஹியுங் மின் ஆட்­டத்­தின் 71வது நிமி­டத்­தில் வெற்றி கோலைப் புகுத்­தினார். டோட்­டன்­ஹ­முக்­காக ஐந்து ஆட்­டங்களில் அவர் புகுத்­தி­யி­ருக்­கும் ஐந்தா­வது கோல் அது என்பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த வெற்றி மூலம் பட்­டி­ய­லில் இரண்டா­வது இடத்தைப் பிடித்­துள்­ளது டோட்­டன்­ஹம்.

லெஸ்டரின் கிங் பவர் அரங்கில் நடைபெற்ற வெற்றியாளர் கிண்ணப் போட்டியின் ஆட்டமொன்றில் வெற்றி கோலைப் புகுத்தும் இஸ்லாம் ஸ்லிமானி. லெஸ்டர் குழுவுக்காக அவர் புகுத்தியிருக்கும் முதல் கோல் இது. படம்: ஏஎஃப்பி

 

 

Loading...
Load next