சிட்டி-செல்டிக் சமநிலை

கிளாஸ்கோ: சாம்பியன்ஸ் லீக் காற்பந்து முதல் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டியும் ஸ்காட்லாந்தின் செல்டிக் குழுவும் தரப்புக்கு மூன்று கோல் களைப் போட்டு சமநிலை கண்டன. இந்தச் சமநிலையின் விளை வாகத் தொடர்ச்சியாகப் பதி னொரு ஆட்டங்களில் வென்று பருவத்தின் ஆகச் சிறந்த தொடக்கம் என்று 1960=61 பருவத்தில் ஸ்பர்ஸ் படைத்த சாதனையை சிட்டியால் எட்ட முடியாமல் போய்விட்டது. தனது முதல் ஆட்டத்தில் ஸ்பானிய ஜாம்பவான் பார்சிலோ னாவை எதிர்கொண்ட செல்டிக் 7-0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. ஆனால் இம்முறை சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் இவர்கள் பார்சிலோனாவிடம் தோல்வி கண்ட அதே ஆட்டக்காரர்கள் தானா என்று ஆட்டத்தைப் பார்த்த வர்கள் வியக்கும் வண்ணம் புதிய உத்வேகத்துடன் விளையாடி னார்கள் செல்டிக் வீரர்கள். ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங்களிலேயே செல்டிக்கின் முதல் கோல் புகுந்தது.

டெம்பேலே அனுப்பிய பந்து சிட்டி கோல் காப்பாளரைக் கடந்து சென்று வலையைத் தீண்டியது. இவ்வளவு விரைவில் ஏற்பட்ட பின்னடைவால் துவண்டுவிடாமல் விளையாடிய சிட்டி ஆட்டத்தின் 11வது நிமிடத்திலேயே ஃபெர் னாண்டினோ மூலம் பதிலடி கொடுத்தது.

செல்டிக்கின் கோலோ டூரேவிடமிருந்து (நடுவில்) பந்தை எப்படியும் பறித்துவிடவேண்டும் என்ற இலக்குடன் அவரைச் சுற்றி வளைத்து நெருக்குதல் தரும் சிட்டி ஆட்டக்காரர்கள். செல்டிக் மூன்று முறை முன்னிலை வகித்தும் விட்டுக்கொடுக்காமல் போராடிய சிட்டி ஆட்டத்தைச் சமநிலையில் முடித்தது. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மால்ட்டா உடனான ஆட்டத்தில் பந்தைத் தன்வசம் கட்டுப்படுத்தும் ஸ்பானிய ஆட்டக்காரர் அல்வாரோ மொராட்டா (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

17 Nov 2019

யூரோ 2020 தகுதிச் சுற்று ஆட்டங்கள்: ஸ்பெயின் காட்டில் கோல் மழை

ஆட்டத்திற்கான வெற்றிக் கிண்ணம் அர்ஜெண்டின வீரர் மெஸ்ஸியிடம் (நடுவில்) வழங்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி

டெஸ்ட் போட்டியின் வெற்றியை ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து கொண்டாடும் விராத் கோஹ்லி (இடது). படம்: ஏஎஃப்பி

17 Nov 2019

முதல் டெஸ்ட்டை கைப்பற்றியது இந்திய அணி