வியத்தகு ஸ்லாட்டன்: மெச்சும் மொரின்யோ

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிற் காக விளையாடி வரும் சுவீடன் நாட்டின் ஸ்லாட்டன் இப்ராகி மோவிச் கோல் அடித்தாலும் அடிக்காவிடினும் ஒரு வியக்கத் தக்க ஆட்டக்காரர் என்று பாராட்டி இருக்கிறார் அக்குழுவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ. ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்ட ரங்கில் நேற்று அதிகாலை நடந்த யூரோப்பா லீக் ஆட்டத்தில் 69வது நிமிடத்தில் இப்ராகிமோவிச் போட்ட கோலால் 1=0 என்ற கணக்கில் யுனைடெட் உக்ரேனின் ஸே„ர்யா லுகான்ஸ்க் குழுவை வீழ்த்தியது.

முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இரு குழுக்களும் கோல் போடத் தடுமாறின. ஆயினும், 67வது நிமிடத்தில் யுனைடெட்டின் மாற்று வீரராக வெய்ன் ரூனி களம் புகுந்தபின் ஆட்டத்தின் போக்கு மாறியது. கோல் கட்டத்திற்குள் ரூனி உதைத்த பந்து தரையில் பட்டு மேலெழும்ப, அதைத் தலையால் முட்டி லாவகமாக வலைக்குள் தள்ளினார் இப்ராகிமோவிச். போட்டிக்குப் பின் இப்ராகிமோ விச் பற்றிப் பேசிய மொரின்யோ, “ஆட்டத்தில் கோலடிக்காவிட்டா லும் குழுவினரிடம் அவர் ஏற்படுத் தும் உத்வேகத்தையும் தாக்குதல் வரிசையில் அவரது தலைமைத் துவத்தையும் காணும்போது அவ ருக்கு 34 வயது என்று சொன் னால் நம்பவே முடியாது. தரம் தான் முக்கியம். அது இப்ராகி மோவிச்சிடம் கொட்டிக் கிடக் கிறது,” என்றார்.

ரூனியின் கோல் முயற்சி பலிக்காமல் போனாலும் அது இப் ராகிமோவிச் மூலம் ஈடேறியதை அடுத்து, தாம் கோல் போட உதவி யதாக அவர் சிரித்து மகிழ்ந்தார் என்ற மொரின்யோ, அந்த நேரத் தில் குழுவின் தேவையறிந்து அவர் செயல்பட்டதாகவும் குறிப் பிட்டார்.

Loading...
Load next