சுடச் சுடச் செய்திகள்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா திணறல்

கோல்கத்தா: முதல் ஆட்டத்தில் வென்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன் னிலை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி, நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓட்டம் குவிக்கத் தடுமாறியது. உடல்நலக் குறைவு காரணமாக கேன் வில்லியம்சன் அவதிப்படு வதால் நியூசிலாந்து அணியின் தலைவர் பொறுப்பை ஏற்றார் ரோஸ் டெய்லர்.

புகழ்பெற்ற ஈடன் கார்டன் விளையாட்டரங்கில் முன்னாள் இந்திய அணித் தலைவர் கபில் தேவ் மணியடித்துத் தொடங்கி வைத்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்தடித்தது. ராகுல் காயமடைந்ததால் முரளி விஜய்யுடன் இணைந்து தொடக்க வீரராகக் களமிறங்கினார் ‌ஷிகர் தவான். ஆயினும், அவரது மீள் வருகை குறிப்பிடும்படியாக அமைய வில்லை. மேட் ஹென்ரி வீசிய இன்னிங் சின் இரண்டாம் ஓவரில் ஒரே ஓட்டத்துடன் தமது விக்கெட்டைப் பறிகொடுத்தார் தவான்.

நியூசிலாந்து பந்துவீச்சைத் தாக்குப்பிடித்து ஆடி 77 ஓட்டங்களைக் குவித்த இந்தியப் பந்தடிப்பாளர் அஜின்கிய ரகானே (வலது) ‘எல்பிடபிள்யூ’ முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கும்படி எதிரணி விக்கெட் காப்பாளர் வாட்லிங் முறையிட, நடுவரும் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon