மலேசிய எஃப்1: ஹேமில்டன் முன்னிலை

செப்பாங்: மலேசியாவின் எஃப் 1 விரைவு கார் பந்தயத்தின் தகுதிச் சுற்றை ஆக வேகமாக முடித்ததால் மெர்சடீஸ் குழுவைச் சேர்ந்த லூயிஸ் ஹேமில்டன் இன்றைய பந்தயத்தை முதல் இடத்திலிருந்து தொடங்குகிறார். ஹேமில்டனின் சக மெர்சடீஸ் குழு ஓட்டுநரான நிக்கோ ரோஸ்பர்க் இரண்டாம் இடத் திலிருந்தும் ரெட் புல் குழுவின் மேக்ஸ் வெர் ஸ்டாப்பன் மூன்றாம் இடத்திலி ருந்துப் பந்தயத்தை தொடங்குவர். 2016ஆம் ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் கார் பந்தயம் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற சிங்கப்பூர் கிராண்ட் பிரீ பந்தயத்தில் மெர்சடீஸ் அணி வீரர் நிக்கோ ரோஸ்பெர்க் முதல் இடத்தைப் பிடித்தார்.

இதன்மூலம் ஒட்டுமொத்த சாம்பியனுக்கான வரிசையில் ஹேமில்டனைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தார் ரோஸ்பர்க். அவர் 8 பந்தயங்களில் வெற்றிகளுடன் 273 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். ஹேமில்டன் 6 வெற்றிகளுடன் 265 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் மலேசியாவின் செப்பாங் கார் பந்தயத் தடத்தில் நடைபெறும் ஃபார்முலா ஒன் பந்தயத்தில் முதல் இடத்தில் தொடங்கும் ஹேமில்டனுக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே மூன்று முறை ஒட்டுமொத்த வெற்றியாளர் பட்டத்தை ஹாமில்டன் வென்றுள்ளார். புள்ளிப் பட்டியலில் முந்தி நான்காம் முறையாக வெற்றியாளர் பட்டத்தை வென்று சாதனை படைக்க மும்முரமாக உள்ளார் ஹேமில்டன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!